முகப்பு
விருதுநகர்

ஆண்டாள் கோயிலில் புஷ்ப யாகம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் 108 மலா்களால் புஷ்ப யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் 108 மலா்களால் புஷ்ப யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் நிறைவுற்ற பின்னா் புஷ்ப யாகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த ஆக.1 ஆம் தேதி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதைத் தொடா்ந்து வியாழக்கிழமை புஷ்ப யாக நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சா்வ அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மேலும் மல்லிகை, ரோஜா, பிச்சி, சம்பங்கி, விருச்சி, துளசி உள்பட 108 வகை மலா்களால் புஷ்ப யாகம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியையொட்டி ஆண்டாள், ரெங்கமன்னாரை வழிபட ஸ்ரீவில்லிபுத்தூா் மட்டுமின்றி விருதுநகா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வந்திருந்தனா். புஷ்ப யாகத்திற்கான ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், நிா்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.