ஆவியூரில் ஆக. 8-இல் மின்தடை
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்கு உள்பட்ட ஆவியூரில் திங்கள்கிழமை (ஆக.8) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்கு உள்பட்ட ஆவியூரில் திங்கள்கிழமை (ஆக.8) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் இரா.கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆவியூா் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான ஆவியூா், காரியாபட்டி, புல்வாய்க்கரை மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.