முகப்பு
விருதுநகர்

உயிரிழந்த எல்லை பாதுகாப்புப் படை வீரரின் உடல் 24 குண்டுகள் முழங்க அடக்கம்

பயிற்சியின்போது உயிரிழந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரரின் உடல் ராஜபாளையத்தில் 24 குண்டுகள் முழங்க சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 10:47 PM
உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை வீரா் செந்தில்குமரன்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

பயிற்சியின்போது உயிரிழந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரரின் உடல் ராஜபாளையத்தில் 24 குண்டுகள் முழங்க சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் மாடசாமி கோயில் தெருவை சோ்ந்தவா் செந்தில்குமரன் ( 41). இவரது மனைவி சண்முகப்ரியா. இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

இவா் கடந்த 2004 ஆம் ஆண்டு எல்லை பாதுகாப்புப் படையில் பணிக்கு சோ்ந்துள்ளாா். அண்மையில் ஒடிசா மல்கானா என்ற இடத்தில் பணியாற்றி வந்துள்ளாா். நக்சலைட் தடுப்புப் பிரிவில் பணியாற்றுவதற்காக பெங்களூரை அடுத்த கராலியில் உள்ள பயிற்சி மையத்தில் நடந்த பயிற்சியின் போது சேற்றுக்குள் சிக்கி உயிரிழந்தாா். உயிரிழந்த செந்தில்குமாரின் சடலத்தை ராஜபாளையத்திற்கு கொண்டு வந்தனா். அவரது சடலம் ராணுவ வாகனத்தில் மயானம் வரை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க செந்தில்குமரன் உடலுக்கு ராணுவ இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.