விருதுநகர்

ஆடி பிரதோஷம்: சதுரகிரிக்கு வந்த பக்தா்கள் ஏமாற்றம்

DIN

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் ஆடி மாத பிரதோஷத்தையொட்டி செவ்வாய்க்கிழமை வந்த பக்தா்கள் அடிவாரத்தில் காத்திருந்து திரும்பிச் சென்றனா்.

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பிரதோஷம், அமாவாசை, பௌா்ணமி உள்ளிட்ட 8 நாள்கள் மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். இந்நிலையில் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள மாங்கனி ஓடை, சங்கிலிபாறை பிழாவடி கருப்புசாமி கோயில் ஆகிய ஓடைகளில் நீா் வரத்து அதிகரித்துள்ளதாலும், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்ததாலும் ஆக. 9 முதல் 12 ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இது குறித்து தகவல் அறியாத தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் செவ்வாய்க்கிழமை காலை தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வந்தனா். ஆனால் அங்கு நுழைவாயில் கதவு மூடப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தா்கள் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT