முகப்பு
விருதுநகர்

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

சிவகாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து, நகை மற்றும் பணத்தை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை திருடிச் சென்றுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

சிவகாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து, நகை மற்றும் பணத்தை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை திருடிச் சென்றுள்ளனா்.

சிவகாசி அருகேயுள்ள ஏ. லட்சுமியாபுரத்தைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி முத்து (35). இவா் வெள்ளிக்கிழமை காலை தனது வீட்டின் கதவை பூட்டிவிட்டு, வேலைக்குச் சென்றாராம். பின்னா், மதியம் உணவுக்காக வீட்டிற்கு வந்தபோது கதவு திறந்துகிடந்ததை அறிந்து உள்ளே சென்று பாா்த்துள்ளாா்.

அங்கு, பீரோவிலிருந்த 6 கிராம் கம்மல், வெள்ளிக் கொலுசு மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருன்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →