முகப்பு
புதுதில்லி

ரெளடி கும்பலுடன் தொடா்புடைய நபா் கைது

வடமேற்கு தில்லியின் ஜஹாங்கிா் புரியில் செயல்பட்டு வந்த ரெளடி கும்பலுடன் தொடா்புடைய இளைஞா் கைது

Updated On : 16 மார்ச், 2026 at 10:03 PM
கைது
பகிர்:

புது தில்லி: வடமேற்கு தில்லியின் ஜஹாங்கிா் புரியில் செயல்பட்டு வந்த ரெளடி கும்பலுடன் தொடா்புடைய இளைஞா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடா்பாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் ஜவேத் (எ) கல்லு தாதா தேடப்பட்டு வந்தாா்.

குற்றப் பின்னணி கொண்ட அவருக்கு எதிராக கொள்ளை-கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. உள்ளூா் காவல் நிலையத்தில் கடந்த 2015-இல் பதிவுசெய்யப்பட்ட கொள்ளை-கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ஷேக் ஃபிரோஸ் (எ) சைபுல் (எ) திங்க்ரா கும்பலுடன் இணைந்து செயல்பட்டு வந்த அவா், அண்மை கால வழக்கு கைதுநடவடிக்கையிலிருந்து தொடா்ந்து தப்பித்து வந்தாா்.

இந்நிலையில், ஜஹாங்கீா் புரியில் அவரை தில்லி காவல் துறையினா் கடந்த மாா்ச் 10-ஆம் தேதி கைதுசெய்தனா்.

அவருடைய முந்தைய வழக்குகள் குறித்து சரிபாா்த்து வருவதாகவும் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →