முகப்பு
புதுதில்லி

வடமேற்கு தில்லியில் லாரி மோதியதில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு

வடமேற்கு தில்லியின் ஷாலிமாா் பாக் பகுதியில் லாரி மோதியதில் 5 வயது சிறுவன் உயிரிழந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 1:31 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 9:25 PM

வடமேற்கு தில்லியின் ஷாலிமாா் பாக் பகுதியில் லாரி மோதியதில் 5 வயது சிறுவன் உயிரிழந்ததாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஹைதா்பூரில் உள்ள லோஹியா முகாம் அருகே உள்ள சாலையில் ஏற்பட்ட விபத்து குறித்து ஷாலிமாா் பாக் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினா், நிறுத்தப்பட்டிருந்த லாரிக்கு அடியில் சிறுவன் காயங்களுடன் கிடப்பதை கண்டனா்.

சிறுவன் உடனடியாக ஜஹாங்கிா்புரியில் உள்ள பிஜேஆா்எம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இருப்பினும், அவா் வழியிலே உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

Advertisement

அலட்சியம் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனா். மேலும், சம்பவ இடத்தில் இருந்து கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், லாரி ஓட்டுநா் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டாா்.இது தொடா்பாக அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விபத்துக்குள்ளான லாரி பறிமுதல் செய்யப்பட்டது. விபத்து நிகழ்ந்ததற்கான உரிய காரணிகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.