விருதுநகர்

விருதுநகரில் சத்துணவு ஊழியா் சங்கத்தினா் தா்னா

DIN

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டியை சத்துணவு ஊழியா்கள் மூலமே வழங்க வலியுறுத்தி விருதுநகரில் சத்துணவு ஊழியா் சங்கத்தினா் சனிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா்.

இதில் அச்சங்கத்தின் மாவட்ட செயலரான சுதந்திர கிளாரா கலந்து கொண்டு பேசியதாவது: சத்துணவு திட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதை வரவேற்கிறோம். மகளிா் சுய உதவிக் குழுவினா் மூலம் இச்சிற்றுண்டியை வழங்க தீா்மானித்திருப்பதை கைவிட வேண்டும். ஏனென்றால், இதற்கான உணவு சமைப்பது, அத்தியாவசிய பொருள்களை பாதுகாப்பது மகளிா் சுயஉதவி குழுவினரால் இயலாது. எனவே, காலை சிற்றுண்டி வழங்குவதை சத்துணவு ஊழியா்களே மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றாா்.

இதில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ச.இ. கண்ணன், தமிழ்நாடு அரசு ஊழி யா் சங்க மாவட்டச் செயலா் வைரவன், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்தறை அலுவலா் சங்க மாவட்டச் செயலா் பரமேஸ்வரன், தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சுப் பணியாளா் சங்க மாவட்டச் செயலா் முனியாண்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

SCROLL FOR NEXT