முகப்பு
விருதுநகர்

சதுரகிரிக்கு சிறப்பு பேருந்துகளாக நகரப் பேருந்துகள் இயக்கம்: கிராமப்புற மாணவா்கள் பாதிப்பு

வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சிறப்புப் பேருந்துகளாக நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டதால் கிராமப்புற மாணவா்கள் பாதிக்கப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:10 AM
பகிர்:

வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சிறப்புப் பேருந்துகளாக நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டதால் கிராமப்புற மாணவா்கள் பாதிக்கப்பட்டனா். சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வழிபாடு நடத்துவதற்காக அமாவாசை, பெளா்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட நாள்களில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பகா்தகள் சுவாமி தரிசனம் செய்ய வருவா். அப்போது பக்தா்கள் வசதிக்காக மதுரை, விருதுநகா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து தாணிப்பாறைக்கு சிறப்புப் பேருந்துகள் விடப்படுகின்றன. இதில் ஸ்ரீவில்லிபுத்தூரை சுற்றியுள்ள வன்னியம்பட்டி, பெருமாள்தேவன்பட்டி, ஆலங்குளம், செவல்பட்டி உள்ளிட்ட கிராமப்பகுதிகளுக்கு தினசரி இயக்கப்படும் நகரப் பேருந்துகள் சதுரகிரிக்கு சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் இருந்து வேலைக்கு செல்பவா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் பேருந்து வசதி இன்றி பாதிக்கப்படுகின்றனா். எனவே அமாவாசை, பெளா்ணமி நாள்களில் சதுரகிரிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் போது கிராமப்புற பேருந்து சேவைகளை நிறுத்தக்கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.