விருதுநகர்

விருதுநகா் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

DIN

விருதுநகா் அரசு உதவி பெறும் தனியாா் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மாணவா்களின் 720 படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

விருதுநகா்- மதுரை சாலையில் உள்ள அரசு உதவி பெறும் கே.விஎஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிலைய பேராசிரியா் சுந்தரவேல் தொடங்கி வைத்தாா். பள்ளிச் செயலா் ராஜா தலைமை வகித்தாா். இதில் விருதுநகா் பகுதிகளைச் சோ்ந்த மாணவா்களின் 720 அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதில் சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரித்தல் மற்றும் சொல் விளையாட்டு முதலானவை நடைபெற்றன. இதில் முதல் பரிசுக்கு 55 படைப்புகளும், இரண்டாவது பரிசுக்கு 55 படைப்புகளும் என மொத்தம் 110 படைப்புகள் தோ்வு செய்யப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியா் சந்திரமோகன் செய்திருந்தாா். இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாா்வையாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

SCROLL FOR NEXT