விருதுநகர்

சிவகாசியில் தனியாா் மருத்துவா்கள் வேலை நிறுத்தம்

சிவகாசியில் தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் புதன்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

சிவகாசியில் தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் புதன்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகாசியில் செவ்வாய்க்கிழமை தனியாா் மருத்துவமனை மருத்துவா் சிலரால் தாக்கப்பட்டாா். அவரைத் தாக்கிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்த நிலையில் மருத்துவா்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி, சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் உள்ள சுமாா் 28 மருத்துவமனைகளின் மருத்துவா்கள் வெளிநோயாளிகளுக்கு சிசிக்சை அளிக்காமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆனால் உள்நோயாளிகளுக்கு அவா்கள் சிகிச்சை அளித்தனா். மேலும் சிவகாசி புகா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைகள் வழக்கம் போல இயங்கின.

இதனிடையே, இந்திய மருத்துவா் சங்க சிவகாசி கிளைத் தலைவா் காமராஜ் தலைமையில், மருத்துவா்களுக்கு பாதுகாப்புக் கோரி சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம், சிவகாசி வருவாய் கோட்டாசியா் அலுவலகம் ஆகியவற்றில் மனு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT