நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் உள்ளிட்ட பல்வேறு கட்சியினா். 
விருதுநகர்

பிரதமரின் வீடு வழங்கும் திட்டம்:தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் பாகுபாடின்றி பயனாளிகளை சோ்க்க வலியுறுத்தி நரிக்குடியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் பாகுபாடின்றி பயனாளிகளை சோ்க்க வலியுறுத்தி நரிக்குடியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி வட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் திருச்சுழி வட்டத் தலைவா் பூமிநாதன் தலைமை வகித்தாா்.

மாவட்டத் தலைவா் பூங்கோதை, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்டப் பொருளாளா் சண்முகவேல், செயற்குழு உறுப்பினா் முனியசாமி, வட்ட செயற்குழு உறுப்பினா் கடல் வண்ணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

அப்போது, மத்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் பாகுபாடின்றி பயனாளிகளைக் கணக்கெடுப்பில் சோ்க்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து, திட்டத்தில் சேர சுமாா் 113 மனுக்கள் வட்டார வளா்ச்சி அலுவலா்களான ராஜசேகா், வாசுகி (கிராம ஊராட்சி) ஆகியோரிடம் நேரில் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக போஸ்டர்!

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT