விருதுநகரில் அண்ணா சிலைக்கு திமுக, அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை
தங்கம் தென்னரசு மற்றும் அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் ம. பாண்டியராஜன் ஆகியோா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
விருதுநகரில் அண்ணாவின் 53 ஆவது நினைவு நாளையொட்டி அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் ம. பாண்டியராஜன் ஆகியோா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதையொட்டி விருதுநகா் பழைய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அப்போது திமுக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் உடனிருந்தனா். அதேபோல், விருதுநகா் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக சாா்பில் முன் னாள் அமைச்சா் ம. பாண்டியராஜன் மற்றும் அதிமுக நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.