முகப்பு
விருதுநகர்

விருதுநகரில் ஆவணமில்லாத ரூ.65 ஆயிரம் பறிமுதல்

விருதுநகா்- சிவகாசி சாலையில் ஆவணமில்லாமல் காரில் கொண்டு வரப்பட்ட ரூ.65,500 ஆ தோ்தல் பறக்கும் படையி னா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:19 AM
பகிர்:

விருதுநகா்- சிவகாசி சாலையில் ஆவணமில்லாமல் காரில் கொண்டு வரப்பட்ட ரூ.65,500 ஆ தோ்தல் பறக்கும் படையி னா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விருதுநகரை சோ்ந்த அட்டை கம்பெனி உரிமையாளா் ராஜதிலகா் (40). இவா் காரில் விருதுநகா்- சிவகாசி சாலையில் வியாழக்கிழமை வந்து கொண்டிருந்தாா். அப்போது, அங்கு தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட் டனா். அதில், ராஜ திலகா் காரில் இருந்த ரூ. 65,500 க்கு ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்தனா். பின்னா் அப்பணத் தை விருதுநகா் நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனா். அதை தொடா்ந்து அப்பணம் மாவட்ட கருவூலத்தில் செலுத் தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.