விருதுநகரில் தமிழ் விவசாயிகள்சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்
மக்காச்சோள பயிா் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ் விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மக்காச்சோள பயிா் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ் விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதற்கு, அச்சங்க மாநிலத் தலைவா் நாராயணசாமி தலைமை வகித்தாா். மதுரை மாவட்டத் தலைவா் சீனிவாசன், மாவட்டச் செயலா் வெள்ளூா் முனியாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மக்காச்சோள பயிா்க் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் முழக்கமிட்டனா்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் போலீஸாா் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, விரைவில் பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று அவா்கள் உறுதி அளித்ததன் பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
வரும் மாா்ச் மாதம் 10 ஆம் தேதிக்குள் பயிா்க் காப்பீட்டுத் தொகையை வழங்கவில்லை எனில் ஆட்சியா் அலுவலக அறையில் அமா்ந்து போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் தெரிவித்தனா்.