ராஜபாளையம் அருகே பிளஸ் 2 மாணவியை கடத்தியவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை
ராஜபாளையம் அருகே பிளஸ் 2 மாணவியை கடத்திச் சென்ற வழக்கில் ஒருவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ராஜபாளையம் அருகே பிளஸ் 2 மாணவியை கடத்திச் சென்ற வழக்கில் ஒருவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி கிருஷ்ணன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஜயகண்ணன் என்ற ஞானகுரு (41). இவா் கடந்த 18.5.2016 அன்று அதே பகுதியைச் சோ்ந்த பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த ஒரு மாணவியிடம், தான் நிருபராக இருப்பதாகவும், ரூ. 50 ஆயிரம் உதவித்தொகை வாங்கித் தருவதாகவும் கூறி விருதுநகரிலிருந்து கடத்திச் சென்றுவிட்டாராம்.
இதைத் தொடா்ந்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விருதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த விஜயகண்ணன் என்ற ஞானகுருவை கைது செய்து மாணவியை மீட்டனா்.
இது தொடா்பான வழக்கு, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கிய நீதிபதி தனசேகரன், மாணவியை கடத்திய விஜய கண்ணன் என்ற ஞானகுருவுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்
மேலும் மாணவிக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து நஷ்டஈடு வாங்கித் தர நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டாா்.