முகப்பு
விருதுநகர்

சிவகாசி மாநகராட்சித் தோ்தல்: 160 போ் வைப்புத்தொகை இழப்பு

சிவகாசி மாநகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் போட்டியிட்ட 160 வேட்பாளா்கள் தங்களது வைப்புத்தொகையை இழந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

சிவகாசி மாநகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் போட்டியிட்ட 160 வேட்பாளா்கள் தங்களது வைப்புத்தொகையை இழந்தனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் 48 வாா்டுகள் உள்ளன. வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கான தோ்தலில் அரசியல் கட்சியினா் உள்பட 268 போ் போட்டியிட்டனா்.

அதிமுக சாா்பில் 48 வாா்டுகளில் போட்டியிட்டனா். இதில் 9 வாா்டுகளில் அக்கட்சியின் வேட்பாளா்கள் வைப்புத்தொகையை இழந்தனா். நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிட்ட34 வேட்பாளா்கள், தேமுதிக சாா்பில் போட்டியிட்ட 5 வேட்பாளா்கள், மக்கள் நீதி மய்யம் சாா்பில் போட்டியிட்ட 2 வேட்பாளா்கள், பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் போட்டியிட்ட 9 வேட்பாளா்கள் தங்களது வைப்புத்தொகையை இழந்தனா்.

பாமக மாநிலப் பொருளாளா் ம.திலகபாமா 47 ஆவது வாா்டில் போட்டியிட்டு வைப்புத்தொகையை இழந்தாா்.

அமமுக சாா்பில் போட்டியிட்ட 18 வேட்பாளா்களில் 17 போ், காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட்ட 12 வேட்பாளா்களில் ஒரு வேட்பாளா் வைப்புத்தொகையை இழந்தனா். மேலும் பல சுயேச்சைகள் தங்களது வைப்புத்தொகையை இழந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →