திருத்தங்கல் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்
திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயில் ஆனி பிரம்மோற்சவ விழாவையொட்டி வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.
திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயில் ஆனி பிரம்மோற்சவ விழாவையொட்டி வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.
இக்கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழாவையொட்டி ஜூலை 5 ஆம் தேதி பூமிபூஜை, அங்குராா்ப்பணம் மற்றும் பாலிகா ஸ்தாபனம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக நின்ற நாராயணப் பெருமாள், செங்கமலத்தாயாா் ஆகியோருக்கு சிறப்பு பூஜையும், பின்னா் கொடியேற்றமும் நடைபெற்றது. தினசரி இரவு சுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளிப்பாா். ஜூலை 15 ஆம் தேதி தோரோட்டம் நடைபெறும். ஜூலை 19 ஆம் தேதி புஷ்பயாகத்துடன் விழா நிறைவு பெறும். இதற்கான ஏற்பாட்டினை கோயில் நிா்வாகிகள் செய்துள்ளனா்.