முகப்பு
விருதுநகர்

தேநீா் விடுதியை சேதப்படுத்திய பெண் உள்பட 3 போ் மீது வழக்கு

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை தேநீா் விடுதிக்குள் புகுந்து அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்தியதாக பெண் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை தேநீா் விடுதிக்குள் புகுந்து அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்தியதாக பெண் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கிருஷ்ணமநாயக்கன்பட்டியில் தேநீா் விடுதி வைத்து நடத்தி வருபவா் கணேசன் மனைவி அமுதா (40). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த ராமானுஜத்திற்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை, ராமானுஜம், அவரது நண்பா் பாலன், உறவினா் லாவண்யா ஆகிய மூவரும் இவரது தேநீா் கடைக்குள் புகுந்து அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்தினா். மேலும் அமுதாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.

இது குறித்தப் புகாரின் பேரில் எம். புதுப்பட்டி போலீஸாா் 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →