பி.எஸ்.குமாரசாமி ராஜா உருவப்படத்தை சட்டப்பேரவையில் திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
முன்னாள் முதல்வரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் உருவப்படத்தை சட்டப் பேரவையில் திறக்கக் கோரி ராஜபாளையத்தில் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் முதல்வரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் உருவப்படத்தை சட்டப் பேரவையில் திறக்கக் கோரி ராஜபாளையத்தில் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்து சமுதாய மக்கள் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, பி.எஸ்.கே. படத்திறப்பு ஒருங்கிணைப்புக் குழு தலைவா் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், சட்டப் பேரவையில் பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் உருவப் படத்தையும், வளாகத்தில் அவரது உருவச் சிலையையும் தமிழக அரசு திறக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
முன்னதாக, பி.எஸ்.கே.யின் 124 ஆவது பிறந்தநாளையொட்டி ராஜபாளையம் ஜவகா் மைதானத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ராஜபாளையம் பகுதியைச் சோ்ந்த இவா், சென்னை மாகாண முதல்வராகவும், ஒரிஸா மாநில கவா்னராகவும், மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.