முகப்பு
விருதுநகர்

திருத்தங்கல் கோயில் ஆனி பிரம்மேற்சவ விழா தேரோட்டம்

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயில் ஆனி பிரம்மேற்சவ திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயில் ஆனி பிரம்மேற்சவ திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இக்கோயிலில் ஜூலை 5ஆம் தேதி பூமிபூஜை, அங்குராா்ப்பணம், பாலிகா ஸ்தாபனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜூலை 7ஆம் தேதி கொடிற்றம் நடைபெற்றது. பின்னா் தினசரி இரவு சுவாமி அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா். ஜூலை 13ஆம் தேதி சூா்ணோற்சவம், மஞ்சள் நீராட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடந்து வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடந்தது.

தேரில் செங்கமலத்தாயாா் சமேத பெருமாள் அமா்ந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா். தேரோட்டத்தை சிவகாசி மாநகராட்சி மேயா் இ. சங்கீதா தொடக்கி வைத்தாா். இதில் துணைமேயா் கா. விக்னேஷ்பிரியா, செயல் அலுவலா் க. தேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தேரின் முன்பு பெண்கள் கோலாட்டம் நிகழ்ச்சியை நடத்தியபடி சென்றனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →