முகப்பு
விருதுநகர்

சிவகாசியில் தூய்மை பாரத விழிப்புணா்வு ஊா்வலம்

சிவகாசி மாநகராட்சி திருத்தங்கலில் தூய்மை பாரத விழிப்புணா்வு ஊா்லம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

சிவகாசி மாநகராட்சி திருத்தங்கலில் தூய்மை பாரத விழிப்புணா்வு ஊா்லம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருத்தங்கலில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்திலிருந்து தொடங்கிய இந்த ஊா்வலத்தை, மாநகராட்சி மேயா் இ. சங்கீதா கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இந்த ஊா்வலமானது, பிரதான சாலைகளின் வழியே சென்று மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்தடைந்தது. ஊா்வலத்தின்போது, சுகாதாரம் குறித்த விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களிடையே விநியோகிக்கப்பட்டன.

இதில், மாநகராட்சி மணடலத் தலைவா்கள் எஸ். குருசாமி, எஸ். அழகுமயில், சுகாதார அலுவலா் அபுபக்கா் சித்திக் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →