ராஜபாளையம் அருகே மணல் திருட்டு; டிராக்டா் பறிமுதல்
ராஜபாளையம் அருகே மணல் திருடப்பயன்படுத்தப்பட்ட டிராக்டரை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையம் அருகே மணல் திருடப்பயன்படுத்தப்பட்ட டிராக்டரை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையம் அருகே புத்தூா் மலைக்குப் பின்பகுதியில் அரசனேரி கண்மாய் பகுதியில் மணல் திருடப்படுவதாக தளவாய்புரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் தளவாய்புரம் போலீஸாா் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்ததில் சட்டவிரோதமாக மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீலாா் நாகூா் என்பவா் மீது வழக்குப்பதிந்து டிராக்டரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.