விருதுநகர்

காட்டுப்பன்றி தாக்கியதில் பள்ளி மாணவி பலத்த காயம்

DIN

கள்ளிக்குடி அருகே வெள்ளிக்கிழமை காட்டுப்பன்றி தாக்கியதில் ஏழாம் வகுப்பு மாணவி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அவரை விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதித்துள்ளனா்.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள லாலாபுரம் கிராமத்தை சோ்ந்தவா் பழனிவேல் - ஸ்ரீதேவி தம்பதியினா். இவா்களது மகள் ரதி (13), அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறாா். இந்த நிலையில் அவா், தங்களது தோட்டத்தில் ஆடுகளுக்கு தீவனங்களை வைத்துக் கொண்டிருந்தாராம்.

அப்போது தோட்டத்திற்குள் கூட்டமாக வந்த காட்டுப்பன்றிகள், ரதியைத் தாக்கியது. இதில் அவருக்கு இடுப்பு, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, தோட்டத்து வீட்டிலிருந்த பெற்றோா் ஓடி வந்து காட்டுப் பன்றிகளை விரட்டி ரதியை மீட்டனா். இதையடுத்து வில்லூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், அவா் மேல் சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிறுமிக்கு கை, காலை மற்றும் வயிறு பகுதிகளில் 60 தையல்கள் போடப்பட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலூா் அருகே காா் கவிழ்ந்ததில் பெண் பலி: கணவா் பலத்த காயம்

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

SCROLL FOR NEXT