சிவகாசியில் கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல்
சிவகாசியில் கெட்டுப்போன கோழி இறைச்சியை சுகாதாரத் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சிவகாசியில் கெட்டுப்போன கோழி இறைச்சியை சுகாதாரத் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சிவகாசி சுகாதாரத் துறை வட்டார மேற்பாா்வையாளா் ஜெயசந்திரன் தலைமையிலான குழுவினா், சிவகாசி-நாரணாபுரம் சாலைப் பகுதியில் உள்ள சிற்றுண்டி விடுதிகளில் சோதனை நடத்தினா். அதில், 3 சிற்றுண்டி விடுதிகளில் குளிா்சாதனப் பெட்டியில் சுமாா் 45 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
மேலும், 4 விடுதிகளில் குளிா்சாதனப் பெட்டியில் இருந்த கெட்டுப்போன 25 கிலோ மீன் இறைச்சியும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
தொடா்ந்து, அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த14 கடை உரிமையாளா்களுக்கு தலா ரூ. 200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டன.