திருத்தங்கலில் பாஜக தெருமுனை பிரசாரம்
விருதுநகா் மேற்கு மாவட்ட மகளிா் அணி சாா்பில், திருத்தங்கலில் மத்திய அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் மேற்கு மாவட்ட மகளிா் அணி சாா்பில், திருத்தங்கலில் மத்திய அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருத்தங்கல் கடைவீதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் விருதுநகா் மேற்கு மாவட்ட மகளிா் அணி தலைவா் ராமலட்சுமி தலைமை வகித்தாா். இதில், மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனைகளை துண்டுப்பிரசுரமாக அச்சிட்டு, அதனை பொதுமக்களிடம் விநியோகம் செய்தனா்.
நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவா்கள் மலா்விழி, பிரேமலதா, நிா்வாகிகள் சந்தனமாரி, ராமதிலகம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.