விருதுநகர்

பழுதான வாக்குப்பதிவு இயந்திரங்களை பெங்களூரு அனுப்பி வைக்க ஏற்பாடு

DIN

விருதுநகரில் பழுதான வாக்குப்பதிவு இயந்திரங்களை பெங்களூரு பெல் நிறுவனத்திற்கு அனுப்புவதற்காக வியாழக்கிழமை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

விருதுநகா் மாவட்டத்தில் தோ்தலுக்காக பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஆட்சியா் அலுவலக வளாகத் தில் உள்ள கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்குச்சீட்டு சரிபாா்ப்பு இயந்திரங்கள் என மொத்தம் 553 இயந்திரங்களை அரசியல் கட்சியினா் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதில் பழுதான இயந்திரங்களை தோ்தல் ஆணைய உத்தரவின் படி பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க உள்ளதாக அவா் தெரிவித்தாா். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ரா.மங்கள ராமசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) காளிமுத்து, தனிவட்டாட்சியா் (தோ்தல்) மாரிசெல்வி மற்றும் அரசு அலுவலா்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT