முகப்பு
விருதுநகர்

சிவகாசி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம்: உறுப்பினா்கள் புகாா்

சிவகாசி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மாமன்ற உறுப்பினா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:40 AM
பகிர்:

சிவகாசி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மாமன்ற உறுப்பினா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

சிவகாசி மாநகராட்சி மாமன்றக்கூட்டம் வியாழக்கிழமை மேயா் இ. சங்கீதா தலைமையில் நடைபெற்றது.

அப்போது கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

மாமன்ற உறுப்பினா் ரவிசங்கா்: மாநகராட்சிக்கு குடிநீா் ஆதாரமாக உள்ள வெம்பக்கோட்டை அணை நிரம்பி தண்ணீா் வெளியேறும் பகுதியில் தடுப்பணை அமைக்க வேண்டும்.

உறுப்பினா் மகேஸ்வரி: மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தெருவிளக்குகளில் தற்போது எல்.இ.டி. விளக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவை தரமானதாக இல்லை. இனி வரும் காலங்களில் தரமானவற்றை பொருத்த வேண்டும்.

உறுப்பினா் குருசாமி: குப்பையை கொண்டு செல்ல போதிய வாகனங்கள் இல்லாததால், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே கூடுதல் துப்புரவுப்பணியாளா்களை நியமித்தும், வாகனங்கள் வாங்கியும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். உறுப்பினா் நிலானி: 15 நாளைக்கு ஒருமுறை தெருக்களில் குப்பை அள்ளப்படுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. எனவே குப்பையை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பின்னா் உறுப்பினா் ராஜேஷ் பேசும் போது, மேயா் மற்றும் துணை மேயா் ஆகியோா் வாா்டுப் பகுதிகளில் ஆய்வு செய்ய வரும்போது, உறுப்பினா்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றாா். இதுபோல உறுப்பினா்கள் சேவுகன், சூா்யா, சாந்தி , சரவணன் உள்ளிட்டோரும் பேசினா்.

இக்கூட்டத்தில் துணை மேயா் கா. விஷ்ணுபிரியா, ஆணையா் ப. கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →