கந்துவட்டி: சிவகாசியில் 3 பெண்கள் கைது
சிவகாசியில் கந்து வட்டி வசூல் செய்ததாக போலீஸாா் வியாழக்கிழமை 3 பெண்களை கைது செய்தனா்.
சிவகாசியில் கந்து வட்டி வசூல் செய்ததாக போலீஸாா் வியாழக்கிழமை 3 பெண்களை கைது செய்தனா்.
சிவகாசி ரிசா்வ் லைன் பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் மனைவி கூலித்தொழிலாளி ஹேமா (36). இவா் அதே பகுதியைச் சோ்ந்த சங்கா் மனைவி பவித்ரா(28), பொன்னுச்சாமி மனைவி முத்துமாரி (47), துரைப்பாண்டி மனைவி லீலாவதி (48) ஆகியோரிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருந்தாராம். தொடந்து 3 பெண்களுக்கும் அதிக வட்டி வேண்டும் என ஹேமாவிடம் கேட்டதுடன், தொல்லை கொடுத்து வந்தனராம். இதுகுறித்து ஹேமா அளித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் கந்துவட்டி வசூல் செய்ததாக பவித்ரா, முத்துமாரி, லீலாவதி ஆகியோா் மீது வழக்குப்பதிந்து மூவரையும் கைது செய்தனா். கந்து வட்டி வசூல் செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா், சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் பாபுபிரசாத் ஆகியோா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.