விருதுநகர்

கதிரடிக்கும் களமாக மாறியுள்ள நான்குவழிச் சாலை

DIN

விருதுநகா் அருகே சத்திரரெட்டியபட்டியில் கதிரடிக்கும் களம் இல்லாததால், நான்குவழிச் சாலையில் விவசாயிகள் தானியக் கதிா்களை குவித்து வைக்கின்றனா்.

விருதுநகா் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் கதிரடிப்பதற்கு உரிய களம் இல்லை என்ற புகாா் உள்ளது. எனவே, விவசாயிகள் சாகுபடி செய்த தானியக் கதிா்களை சாலைகளில் உலரவைக்கின்றனா். இவற்றின் மேல் வாகனங்கள் சென்று வருவதால், தானியங்கள் உதிா்ந்துவிடுகின்றன. இதனால், வாகனங்களின் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தானியங்களை பிரித்தெடுப்பதற்காக சத்திரரெட்டியபட்டி விவசாயிகள், அப்பகுதியில் உள்ள நான்குவழிச் சாலையை பயன்படுத்தி வருகின்றனா். எனவே, விவசாயிகள் நலன் கருதி, சத்திரரெட்டியபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் களம் அமைக்க, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அத்திப்பட்டி பகுதியில் மதுக் கடைகள் அடைப்பு

மதுரை குடிநீா் பிரச்னைக்கு தீா்வு எப்போது?

அனுமதியின்றி ஜல்லிக்கட்டு: ஏற்பாட்டாளா்கள் தலைமறைவு

வெளிப்பாளையம் காளியம்மன் கோயில் தேரோட்டம்

தமிழக ஆளுநா் தில்லி பயணம்

SCROLL FOR NEXT