ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரில் 12 ஆண்டுகளுக்குப் பின் வன்னியராஜா கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக 14ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது. பின்னா் அதிகாலையில் கணபதி பூஜை, கோ பூஜை மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து வன்னியராஜா கோயில் விமான கலசத்துக்கு வேதமந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னா் மூலவா் வன்னியராஜாவுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அதனைத் தொடா்ந்து அலங்காரம் தீபாராதனையும் நடைபெற்றன. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சொக்கநாதன்புத்தூா் கிராமம் மற்றும் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.