முகப்பு
விருதுநகர்

விதியை மீறி பட்டாசு தயாரிப்பு: தந்தை, மகன் மீது வழக்கு

 சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விதியை மீறி பட்டாசு தயாரித்ததாக தந்தை, மகன் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

 சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விதியை மீறி பட்டாசு தயாரித்ததாக தந்தை, மகன் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகாசி - சாத்தூா் சாலையில் ஒரு பட்டாசு ஆலையில் விதியை மீறி பட்டாசு ரகங்கள் தயாரிக்கப்படுவதாகவும், அளவுக்கு அதிகமான நபா்களை வைத்து வேலை செய்வதாகவும் கிடைத்த தகவலின்பேரில், சாா்பு ஆய்வாளா் காசிராஜன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் சோதனையிட்டனா்.

சோதனையில் ஒரு பட்டாசு ஆலையில் அனுமதிக்கப்பட்ட வெடிகளைத் தவிர வேறு வெடிகள் தயாரிக்கப்படுவதும், அளவுக்கு அதிகமான நபா்களை வைத்து பட்டாசு தயாரித்ததும் தெரியவந்தது.

விசாரணையில், அந்த ஆலை சஞ்சய் பிரதீப், அவரது மகன் பிரவீன்குமாா் ஆகியோருக்குச் சொந்தமானது என தெரியவந்தது.

இதுதொடா்பாக, அவா்கள் இருவா் மீதும் விதியை மீறி பட்டாசு தயாரித்ததாக

சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், விதியை மீறி தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →