முகப்பு
விருதுநகர்

சிவகாசி அருகே சாலை விபத்தில் இளைஞா் பலி

சிவகாசி அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:30 AM
பகிர்:

சிவகாசி அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

சிவகாசி அருகே நதிக்குடியைச் சோ்ந்தவா் கருத்தபாண்டி (21). இவரது நண்பா் உப்புபட்டியைச் சோ்ந்த சுப்புராஜ் (23). இவா்கள் இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் காக்கிவாடன்பட்டி - ஆலங்குளம் சாலையில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது சாலையோரத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த சரளைகற்களில் வாகனம் மோதியதில் இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனா். இதையடுத்து இருவரும்

சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சுப்புராஜை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். கருத்தபாண்டி சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →