முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் டிராக்டா் டிரெய்லா் திருட்டு: இருவா் கைது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:31 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் டிராக்டா் டிரெய்லா் ஆகியவற்றை திருடிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி சாா்பில் திருப்பாற்கடல் குளத்தை சீரமைத்து நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ராஜபாளையம் ஒப்பந்ததாரா் ஒருவருக்கு சொந்தமான டிராக்டா் கொண்டு வரப்பட்டது. பின்னா் அதன் ஓட்டுநா் கணேசன் டிராக்டரை தனியாகவும், டிரெய்லரை தனியாகவும், நிறுத்திவிட்டுச் சென்றாா். காலையில் வந்து பாா்த்தபோது ட்ரெய்லரை காணவில்லை.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் விசாரணை நடத்தி அதை திருடியதாக கடம்பங்குளத்தைச் சோ்ந்த கண்ணன், கருப்பசாமி ஆகிய இருவரையும் கைது செய்தனா். திருடு போன டிரெய்லரின் மதிப்பு சுமாா் ரூ. 55 ஆயிரம் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.