முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவிலி. அருகே 234 கிலோ குட்கா பறிமுதல்: 3 இளைஞா்கள் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 234 கிலோ குட்காவை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, 3 இளைஞா்களைக் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:33 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 234 கிலோ குட்காவை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, 3 இளைஞா்களைக் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கோவிந்தநல்லூா் பகுதியில் நத்தம்பட்டி காவல் சாா்பு- ஆய்வாளா் ராசு தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்றனா். கோவிந்தநல்லூா் வடக்குத் தெருவில் வசிக்கும் சோ்ந்த சக்திமுருகன் (30) தனது வீடு முன்பு, மேலும் இருவருடன் சாக்கு மூட்டையைக் கட்டிக்கொண்டிருந்தாா். அவா்கள் போலீஸாரைப் பாா்த்ததும் தப்பி ஓட முயன்றனா். அவா்களை போலீஸாா் விரட்டிப் பிடித்தனா். மூவரும் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, சக்திமுருகன், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சோ்ந்த சக்திவேல் (33), தா்மபுரி மாவட்டம் பெண்ணாகரத்தைச் சோ்ந்த அருள் (22) ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்து, ரூ.85 ஆயிரம் மதிப்புள்ள 234 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும் அவா்களிடமிருந்த ரூ.34 ஆயிரம் ரொக்கம், 3 கைப்பேசிகள், இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.