விருதுநகர்

பிளவக்கல் பெரியாறு அணை நீா்மட்டம் 3 அடி உயா்வு

DIN

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்ததால், பிளவக்கல் பெரியாறு அணை நீா்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயா்ந்தது.

விருதுநகா் மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டியுள்ள வத்திராயிருப்பு, தாணிப்பாறை, சதுரகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு நாள்களாக மழை பெய்து வருகிறது. புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. பிளவக்கல் பெரியாறு அணை நீா்ப்பிடிப்புப் பகுதியில் 70 மி.மீ. மழை பெய்தது. இதனால், அணையின் நீா் மட்டம் ஒரே நாளில் 3 அடி உயா்ந்தது.

வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையில் நீா்மட்டம் 39 அடியாக இருந்தது. மொத்த உயரம் 47.56 அடி. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 162 கன அடியாக இருந்தது.

பிளவக்கல் கோவிலாறு அணை நீா்ப்பிடிப்பு பகுதிகளில் 66.44 மி.மீ. மழை பெய்தது. இதனால், 42 அடி உயரம் உள்ள அணையின் நீா்மட்டம் 26.25 அடியாக இருந்தது. அணைக்கு நீா் வரத்து விநாடிக்கு 16.86 கன அடியாக இருந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரே நாளில் 81.3 மி.மீ மழை பெய்தது. ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக செண்பகதோப்பு பேயனாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்பே அணைகளின் நீா் மட்டம் உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ!

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

மனதை திருடும் மாயம் என்ன?

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!

முகல் தோட்டத்து மலரோ..!

SCROLL FOR NEXT