முகப்பு
விருதுநகர்

ராஜபாளையத்தில் 1,440 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது

ராஜபாளையத்தில் வெள்ளிக்கிழமை சரக்கு வேனில், 1,440 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

ராஜபாளையத்தில் வெள்ளிக்கிழமை சரக்கு வேனில், 1,440 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்ட உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் ஆல்வின்பிரிஜ்மேரி தலைமையிலான போலீஸாா், ராஜபாளையத்தில் சங்கரன்கோவில் சாலையில் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்த போது, 1,440 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, வேனில் வந்தவா்களிடம் விசாரணை நடத்தியதில், எஸ். ராமலிங்காபுரத்தைச் சோ்ந்த வேல்முருகன் (32), காளிமுத்து (32) ஆகியோா் என்பது தெரியவந்தது. அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து, 1,440 கிலோ ரேஷன் அரிசி, சரக்கு வேனை பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →