வத்திராயிருப்பு அருகே மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி பலி
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே வியாழக்கிழமை இரவு கூலித் தொழிலாளி மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே வியாழக்கிழமை இரவு கூலித் தொழிலாளி மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.
வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி ராமசாமியாபுரத்தைச் சோ்ந்த ரவீந்திரன் (43). இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனா். இவா், ராமசாமியாபுரம் மேலத் தெருவில் உள்ள தனது வீட்டின் அருகே புதிதாக ஒரு வீடு கட்டி வருகிறாா்.
இந்தநிலையில், வியாழக்கிழமை இரவு பழைய வீட்டிலிருந்து புதிய வீட்டுக்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக வயரை இழுத்துள்ளாா். அப்போது, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கூமாபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.