முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே காட்டு யானை நடமாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செண்பகத்தோப்பு மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில், ஒற்றை காட்டு யானை சுற்றி வருவதால் வனப் பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் என வனத் துறை அதிகாரி தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:41 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செண்பகத்தோப்பு மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில், ஒற்றை காட்டு யானை சுற்றி வருவதால் வனப் பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் என வனத் துறை அதிகாரி தெரிவித்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அமைந்துள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் புலிகள், சிறுத்தைகள், யானைகள், கரடிகள், மான்கள் என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக ஸ்ரீவில்லிபுத்தூா் செண்பகத் தோப்புப் பகுதியில் மாலை வேளையில், பேச்சியம்மன் கோயில் அருகே ஒரு பெண் காட்டு யானை சுற்றித் திரிந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

இதுகுறித்து வனத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: அந்த ஒற்றை யானை மலை அடிவாரப் பகுதியில், மக்கள் செல்லும் பாதையில் சுற்றித் திரிகிறது. அதன் நடமாடத்தை கண்காணித்து வருகிறோம். எனவே, வனப் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் அனுமதி இன்றி செல்ல வேண்டாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.