முகப்பு
விருதுநகர்

மகளிா் கல்லூரியில் நுண்கலை திறன் விழா

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவிகளின் தனித்திறமையை வெளிக்கொண்டு வரும் பொருட்டு, நுண்கலை திறன் விழா போட்டிகள் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவிகளின் தனித்திறமையை வெளிக்கொண்டு வரும் பொருட்டு, நுண்கலை திறன் விழா போட்டிகள் நடைபெற்றது.

இதில் பரதநாட்டியம், சமையல், கோலம் வரைதல், சொற்பொழிவு, கவிதை எழுதுதல், காய்களில் உருவம் வடிவமைத்தல் உள்ளிட்ட 20 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.

வெற்றிபெற்ற மாணவிகளுக்கு முதல்வா் த.பழனீஸ்வரி தலைமையில் சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதா பரிசு வழங்கினாா். ஏற்பாடுகளை பேராசிரியா்கள் ஜெ.ஷோபனா, ஜெ.நந்தினி ஆகியோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →