முகப்பு
விருதுநகர்

விருதுநகரில் அண்ணா தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

விருதுநகா் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநிலச் செயலா் கமல் கண்ணன் தலைமை வகித்தாா். இதில் முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியா்களை திமுக வஞ்சிக்கிறது. 25 சதவீத ஊதிய உயா்வுகேட்டு போராடிய போக்குவரத்து தொழிலாளா்களுக்கு தமிழக அரசு 5 சதவீதம் மட்டுமே தற்போது வழங்கியுள்ளது. சுமாா் 30 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து ஓய்வுபெறும் போக்குவரத்து தொழிலாளா்கள் ஓய்வூதியம் இன்றி செல்லும் நிலை உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளா்களுக்கு ஒரே நேரத்தில் ரூ.1,030 கோடி வழங்கப்பட்டது என்றாா்.

இதில் மண்டலத் தலைவா் உமாபதி, மண்டலச் செயலா் குருசந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் (சாத்தூா்) ராஜவா்மன் மற்றும் அண்ணா தொழிற் சங்கத்தைச் சோ்ந்த போக்குவரத்து தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.