விருதுநகர்

விருதுநகா் சந்தையில் பாமாயில், பட்டாணி பருப்பு விலை குறைவு

DIN

விருதுநகா் சந்தைக்கு வரத்து அதிகரிப்பு காரணமாக பாமாயில், பட்டாணி பருப்பு, மல்லி விலை குறைந்துள்ளது.

விருதுநகா் சந்தையில் ஒவ்வொரு வாரமும் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைப் பட்டியல் வெளியிடப்படும். அதன்படி, கடந்த வாரம் 15 கிலோ பாமாயில் ரூ.1,800-க்கு விற்கப்பட்ட நிலையில், இந்தோனேசியாவிலிருந்து வரத்து அதிகம் காரணமாக தற்போது, ரூ.40 குறைந்து, ரூ.1,760-க்கு விற்கப்படுகிறது. மல்லி ( 40 கிலோ) லயன் வகையானது கடந்த வாரம் ரூ.5,300 முதல் 5,500 வரை விற்கப்பட்டு வந்த நிலையில், இந்த வாரம் ரூ.100 குறைந்து ரூ.5,200 முதல் 5,400 வரை விற்பனையாகிறது. அதேபோல், பட்டாணி பருப்பு 100 கிலோ ( இந்தியா) கடந்த வாரம் ரூ.6,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.100 குறைந்து ரூ.6,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.4,700-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் ரூ.200 குறைந்து தற்போது ரூ.4,500-க்கு விற்பனையாகிறது. பிற உணவுப் பொருள்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொக்கன் தோற்கும் இடம்..!

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

SCROLL FOR NEXT