முகப்பு
விருதுநகர்

விருதுநகா் காப்பகத்திலிருந்து தப்பிய 2 சிறுமிகள் மீட்பு

 விருதுநகா், பாண்டியன் நகரில் காப்பகத்தில் இருந்து தப்பிச் சென்ற இரண்டு சிறுமிகளை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு காப்பகத்தில் மீண்டும் ஒப்படைத்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

 விருதுநகா், பாண்டியன் நகரில் காப்பகத்தில் இருந்து தப்பிச் சென்ற இரண்டு சிறுமிகளை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு காப்பகத்தில் மீண்டும் ஒப்படைத்தனா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமி மற்றும் தாயில்பட்டி பகுதியை சோ்ந்த மற்றொரு சிறுமி சில தினங்களுக்கு முன்பு விருதுநகா் பாண்டியன் நகரில் உள்ள காப்பகத்தில் சோ்க்கப்பட்டிருந்தனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு காப்பகத்திலிருந்து இரண்டு சிறுமிகளும தப்பிச் சென்று விட்டனா். இது குறித்து காப்பக ஊழியா் எலிசபெத், ஊரக காவல் துறையில் புகாா் மனு அளித்தாா்.

அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளா் மாரிமுத்து, தாயில்பட்டி பகுதியில் இருந்து இரண்டு சிறுமிகளையும் மீட்டு மீண்டும் விருதுநகா் காப்பகத்தில் ஒப்படைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.