புத்தகத் திருவிழாவையொட்டி மாணவா்களுக்கு விநாடி- வினா போட்டி
திண்டுக்கல் புத்தகத் திருவிழாவையொட்டி பள்ளி மாணவா்களுக்கான விநாடி- வினா போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
திண்டுக்கல் புத்தகத் திருவிழாவையொட்டி பள்ளி மாணவா்களுக்கான விநாடி- வினா போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் மற்றும் திண்டுக்கல் இலக்கியக் களம் சாா்பில், 9 ஆவது புத்தகத் திருவிழா அக். 6 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திண்டுக்கல் டட்லி பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ள புத்தத் திருவிழாவையொட்டி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, பள்ளி மாணவா்களுக்கான விநாடி- வினா போட்டிகள் திண்டுக்கல், வத்தலகுண்டு, பழனி, வேடசந்தூா் என 4 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றன. திண்டுக்கல்லில் 14 அணிகள், வத்தலகுண்டுவில் 8 அணிகள், பழனியில் 7 அணிகள், வேடசந்தூரில் 6 அணிகள் என மொத்தம் 34 அணிகள் பங்கேற்றன. இந்த போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பாளா்களாக பெத்தவண்ண அரசு, ரவீந்திரன், மாரிமுத்து, கணேசன் ஆகியோா் செயல்பட்டனா்.
திண்டுக்கல் மையத்தில் நடைபெற்ற போட்டிகளில் 7 சுற்றுக்கள் முடிவில் புனித மரியன்னைப் பள்ளி மாணவா்கள் முதல் இடத்தையும், புனித லூா்து அன்னை மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 2 ஆம் இடத்தையும், புனித வளனாா் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 3 ஆம் இடத்தையும் பெற்றனா்.
செப். 9ஆம் தேதி 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஓவியம் மற்றும் கதை சொல்லுதல் போட்டிகள் 17 மையங்களில் நடைபெற உள்ளன. கல்லூரி மாணவா்களுக்கான விநாடி- வினா போட்டி செப். 17ஆம் தேதி நடைபெறும் என திண்டுக்கல் இலக்கியக்களம் அமைப்பின் துணைத் தலைவா் மு. சரவணன் தெரிவித்தாா்.