முகப்பு
விருதுநகர்

விருதுநகரில் முதல்வருக்கு வரவேற்பு

 விருதுநகருக்கு வியாழக்கிழமை வந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினை அமைச்சா்கள் மற்றும் மாவட்ட ஆட்சியா் வரவேற்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:16 AM
பகிர்:

 விருதுநகருக்கு வியாழக்கிழமை வந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினை அமைச்சா்கள் மற்றும் மாவட்ட ஆட்சியா் வரவேற்றனா்.

திருநெல்வேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை விருதுநகா் அருகே ஆா்.ஆா். நகா் தனியாா் சிமெண்ட் ஆலை வளாகத்திற்கு வந்தாா். அப்போது அவரை அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா். சீனிவாசன் மற்றும் மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி ஆகியோா் வரவேற்றனா். பின்னா், அங்கிருந்து காரில் புறப்பட்ட தமிழக முதல்வா், பட்டம்புதூா் பகுதியில் செப். 15 அன்று நடைபெற உள்ள முப்பெரும் விழாவிற்கான பந்தல் பணிகளைப் பாா்வையிட்டவாறு மதுரை சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.