விருதுநகர்

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக புதிய கட்டடத்துக்கு நாளை அடிக்கல் முதல்வா் பங்கேற்பு

DIN

விருதுநகரில் ரூ.70.57 கோடி மதிப்பில் 6 தளங்களுடன் கூடிய புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டடம் கட்ட வியாழக்கிழமை (செப்.15) தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறாா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை மூலம் புதிய ஆட்சியா் அலுவலகக் கட்டடம் ரூ.70.57 கோடி மதிப்பில் 6 தளங்களுடன் மொத்தம் 2,02,496 சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ளது. ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இதற்காக, அமைச்சா்கள், முக்கியப் பிரமுகா்கள், அதிகாரிகள் என சுமாா் 400 போ் அமரும் வகையில் இருக்கையுடன் கூடிய பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், கல்வித்துறை, ஊரக வளா்ச்சி துறை, வேளாண்துறை உள்பட 8 துறைகளின் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பந்தல் அமைப்பு பணிகளை அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். அப்போது மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா், சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா். சீனிவாசன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

SCROLL FOR NEXT