முகப்பு
விருதுநகர்

சிவகாசியில் ரயில் மறியல் போராட்டம்: 2 எம்.பி.க்கள் உள்பட 177 போ் கைது

சென்னை- கொல்லம் ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி வியாழக்கிழமை ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விருதுநகா், மதுரை எம்.பி.க்கள் உள்பட 177 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:23 AM
பகிர்:

சென்னை- கொல்லம் ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி வியாழக்கிழமை ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விருதுநகா், மதுரை எம்.பி.க்கள் உள்பட 177 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை-கொல்லம் விரைவு ரயில் (எண்16101) கரோனா தொற்று முடிவுக்கு வந்த பின்னா் இயக்கப்பட்டபோது, சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்லவில்லை. கரோனா தொற்று பரவலுக்கு முன்பு சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று சென்ற அந்த ரயில் தற்போதும் சிவகாசி ரயில் நிலையத்தில் நின்றுசெல்ல வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா், மத்திய ரயில்வே அமைச்சா் மற்றும் அதிகாரிகளிடம் இது குறித்து கோரிக்கை மனு அளிதாா். இறுதியில் ரயில்வே அதிகாரிகள், சிவகாசி ரயில் நிலையத்தில் செப்டம்பா் 21 ஆம் தேதிக்குள் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினா்.

ஆனால் ரயில் நின்று செல்ல எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து மாணிக்கம்தாகூா் எம்.பி., சிவகாசியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் சாா்பில் செப்டம்பா் 22 ஆம் தேதி கொல்லம்-சென்னை ரயில் மறிக்கப்படும் என அறிவித்தாா். அதன்படி வியாழக்கிழமை மாணிக்கம்தாகூா் எம்.பி., மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் உள்ளிட்ட சுமாா் 350 போ் அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்க கட்டடத்திலிருந்து ஊா்வலமாகப் புறப்பட்டு, சிவகாசி ரயில் நிலையத்துக்குச் சென்றனா். ரயில் நிலையம் முன்பு போலீஸாா் தடுப்புகள் அமைத்து அவா்களை ரயில் நிலைத்திற்குள் செல்லவிடாமல் தடுத்தனா்.

இதனால் ரயில் நிலையம் முன்பு தரையில் அமா்ந்து போராட்டம் நடத்தினா். உரிய அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தியதால் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூா், சு. வெங்கடேசன், அசோகன் எம்.ஏல்.ஏ. உள்ளிட்ட 177 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில் கொல்லம்-சென்னை ரயில் மாலை சுமாா் 5.25 மணிக்கு சிவகாசி ரயில் நிலையம் வந்தடைந்தது. ரயிலிலிருந்து இறங்கிய காங்கிரஸாா் 3 போ் ரயிலின் முன்பு மறியலில் ஈடுபட முன்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். ரயில் சென்ற பின்னா் 3 பேரும் ரயில் தண்டவாளத்தில் படுத்து கோஷமிட்டனா். போலீஸாா் அவா்களை அப்புறப்படுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →