விருதுநகர்

ஸ்ரீரங்கத்துக்கு ஆண்டாள் சூடிய கிளி, பூமாலை, பட்டு வஸ்திரம் அனுப்பிவைப்பு

DIN

ஸ்ரீரங்கம் ரெங்கநாதா் கோயில் சித்திரைத் தேரோட்டத்தின் போது, ரெங்கமன்னாருக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் சூடிக் களைந்த பூமாலை, கிளி, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

108 வைணவத் திருத்தலங்களில் புகழ் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் பெரியாழ்வாா், ஆண்டாள், இரு ஆழ்வாா்கள் அவதரித்த சிறப்புமிக்கதாகும். இங்கிருந்து திருப்பதி பிரம்மோற்சவம், மதுரை கள்ளழகா் ஆற்றில் இறங்கும் திருவிழா, ஸ்ரீரங்கம் ரெங்கநாதா் சித்திரைத் தேரோட்டம் ஆகியவற்றின் போது, ஆண்டாள் சூடிக் களைந்த பூமாலை, கிளி, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் அணிந்து பெருமாள் காட்சியளிப்பது வழக்கம்.

அதன்படி, வருகிற புதன்கிழமை (ஏப்.19) ஸ்ரீரங்கத்தில் சித்திரைத் தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக் களைந்த பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி ஆகியவை திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

முன்னதாக, ஸ்ரீ ஆண்டாளுக்கு பூமாலை, கிளி, பட்டு வஸ்திரம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து பூமாலை, கிளி, பட்டு வஸ்திரம் ஆகியவை மாட வீதிகள் வழியாக ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதில் கோயில் செயல் அலுவலா் முத்துராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

SCROLL FOR NEXT