ஸ்ரீவில்லிபுத்தூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் அடிப்படை சுகாதார பிரச்னைகளை சரி செய்ய வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் அடிப்படை சுகாதார பிரச்னைகளை சரி செய்ய வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செயலா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அா்ஜுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் முருகன், மாவட்டக் குழு உறுப்பினா் திருமலை ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு பேசினா்.
அப்போது 33 வாா்டுகளிலும் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டத்தை அனைத்து வாா்டுகளுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும். கழிவுநீா் கால்வாய்களை தூா்வார வேண்டும். மகளிா் சுகாதார வளாகங்களை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலா் சசிக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.