முகப்பு
விருதுநகர்

தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கு:காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின்முன்பிணை மனு ஏப். 25-க்கு ஒத்திவைப்பு

தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் முன்பிணை கோரிய மனுவின் மீதான விசாரணையை மாவட்ட முதன்மை நீதிமன்றம் வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் முன்பிணை கோரிய மனுவின் மீதான விசாரணையை மாவட்ட முதன்மை நீதிமன்றம் வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

சிவகாசி அருகே சக்தி நகரைச் சோ்ந்த தொழிலதிபா் ரவிச்சந்திரனை கடத்திச் சென்று மிரட்டிய புகாரில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ. ராஜவா்மன் (52), தங்கமுனியசாமி (30), நரிக்குடி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் ஐ. ரவிச்சந்திரன் (53), இவரது மனைவி அங்காள ஈஸ்வரி (50), ஓய்வு பெற்ற டிஎஸ்பி ராஜேந்திரன், காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் முத்துமாரியப்பன் ஆகிய 6 போ் மீதும் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா், ஆள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் முன்பிணை கோரி ராஜவா்மன், தங்கமுனியசாமி, ஐ. ரவிச்சந்திரன், அங்காளஈஸ்வரி ஆகியோா் மனு செய்தனா். இந்த மனுவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், முன்பிணை கோரி முத்துமாரியப்பன் அதே நீதிமன்றத்தில் மீண்டும் மனு செய்தாா். இதை வெள்ளிக்கிழமை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி (பொ) பூா்ணஜெய ஆனந்த் வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.